/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வனத்துறை சார்பில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
/
வனத்துறை சார்பில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
வனத்துறை சார்பில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
வனத்துறை சார்பில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
ADDED : செப் 16, 2025 10:04 PM
உடுமலை; மாவட்ட வன அலுவலர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தலைமையில், நாளை (18ம் தேதி) விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு வனச்சரகங்கள் உள்ளன.
வனத்திலிருந்து வெளியேறும் காட்டுப்பன்றிகளால், கடும் பாதிப்புகள் ஏற்படுகிறது. வன எல்லை கிராமங்களில் மட்டுமின்றி, 60 கி.மீ., தொலைவிலுள்ள கிராமங்களில் முகாமிட்டுள்ள காட்டுப்பன்றிகள், தென்னை, மக்காச்சோளம், காய்கறி என அனைத்து பயிர்களையும் சேதப்படுத்துவதோடு, கால்நடைகள் மற்றும் மனிதர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது.
காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, 6 ஆண்டுகளுக்கு முன்பு, விவசாயிகள் திரண்டு நடத்திய போராட்டத்தை தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் தலைமையில், விவசாயிகள் குறைதீர் கூட்டம், நடத்த முடிவு செய்யப்பட்டது.
மாவட்ட வன அலுவலர் தலைமையில், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக நடக்கவில்லை. கடந்த வாரம் நடந்த உடுமலை வனச்சரக அளவிலான கூட்டத்தில், விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்நிலையில், நாளை (18ம் தேதி) காலை, 11:00 மணிக்கு, மாவட்ட வன அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம், துணை இயக்குனர் ராஜேஷ் தலைமையில் நடக்கும் எனவும், இதில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் பங்கேற்குமாறு வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.