/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெண்டை விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
/
வெண்டை விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : மே 04, 2025 10:25 PM

உடுமலை, ; உடுமலை கண்ணமநாயக்கனுார், குட்டியகவுண்டனுார், பெரிசனம்பட்டி, எலையமுத்துார், சின்னப்பன்புதுார் சுற்றுப்பகுதிகளில், கிணற்று பாசனத்துக்கு, பரவலாக வெண்டை சாகுபடி செய்யப்படுகிறது.
இச்சாகுபடியில், நாற்று நடவு செய்து, 45 நாட்கள் வளர்ச்சிக்கு பிறகு, காய்கள் அறுவடைக்கு தயாராகும். அறுவடை செய்த வெண்டையை விவசாயிகள் உடுமலை உழவர் சந்தை மற்றும் தினசரி சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். சில வியாபாரிகள் நேரடியாக விளைநிலங்களில் கொள்முதல் செய்து ஒட்டன்சத்திரம் சந்தைக்கு கொண்டு செல்கின்றனர்.
நடப்பு சீசனில், வெண்டை அறுவடை சில வாரங்களுக்கு முன் துவங்கியது. அப்போது, கிலோவுக்கு, 13 ரூபாய் மட்டுமே விலை கிடைத்தது. இதனால், விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில், கோடை வெயில் மற்றும் திடீர் மழை காரணமாக அறுவடை பாதித்தது. இதனால், சந்தைக்கு வரத்து குறைந்து, விலை அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, உடுமலை உழவர் சந்தையில், வெண்டை கிலோ 25-30 ரூபாய் வரை விலை கிடைத்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
விவசாயிகள் கூறுகையில், 'வெண்டை செடிகளில் இருந்து இரு நாட்களுக்கு ஒரு முறை காய்களை அறுவடை செய்கிறோம். ெஹக்டேருக்கு 12 டன் வரை விளைச்சல் கிடைக்கும்,' என்றனர்.