/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொத்தமல்லி தழை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
/
கொத்தமல்லி தழை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
ADDED : ஆக 28, 2025 11:06 PM

உடுமலை,; உடுமலை பகுதிகளில், கொத்தமல்லி தழை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உடுமலை கிளுவன் காட்டூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கீரை வகை சாகுபடி அதிகளவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதே போல், கரிசல் மண் பூமிகளில், கொத்தமல்லி தழை மற்றும் மல்லி விதை உற்பத்தியை அடிப்படையாக கொண்டு, மல்லி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
தற்போதைய பருவ மழை காரணமாக, குறைந்த சாகுபடி காலத்தை கொண்ட, கொத்தமல்லி தழை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவ்வாறு, உடுமலை சுற்றுப்பகுதிகளில், மானாவாரியாகவும், கிணற்றுப்பாசனத்துக்கும், கொத்தமல்லி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
மானாவாரியில், பெரும்பாலும், கொத்தமல்லி விதை தேவைக்காக சாகுபடி செய்கின்றனர். கிணற்றுப்பாசனத்தில், தழை உற்பத்திக்காக விதைப்பு செய்யப்படுகிறது. வீரிய ரக விதைகளே இச்சாகுபடிக்கு பயன்படுத்தப்படுகிறது.
இதற்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், திட்டமிட்டு, சுழற்சி முறையில், இச்சாகுபடியை உடுமலை சுற்றுப்பகுதி விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், 'தழை மல்லி சாகுபடியில், ஏக்கருக்கு, 6 ஆயிரம் கிலோ வரை விளைச்சல் கிடைக்கும்; தழை வாடும் முன்பே, அறுவடை செய்து சந்தைப்படுத்தி விட வேண்டும். கடந்த இரு மாதத்திற்கு முன், ஒரு கிலோ தழை மல்லி, 30 ரூபாய் வரை விற்று வந்தது. தற்போது, குறைந்துள்ளது' என்றனர்.