/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராமங்களில் அதிகரிக்கும் திருட்டுகள் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் புகார்

ADDED : ஜன 03, 2025 10:00 PM

உடுமலை; உடுமலை பகுதி கிராமங்களில் அதிகரித்துள்ள,  திருட்டு சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், மனு அளிக்கப்பட்டது.
விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், வருவாய் கோட்டாட்சியர் குமார், தாசில்தார்  விவேகானந்தன்  மற்றும் வனத்துறை, போலீசாரிடம் அளிக்கப்பட்ட மனு:
உடுமலை தாலுகாவிலுள்ள கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில், மின் மோட்டார், மின் கேபிள்கள், விவசாய உபகரணங்கள், கால்நடைகள் தொடர்ந்து திருடப்பட்டு வருகிறது.
மேலும், சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதால், பொது இடங்களில் மது அருந்துவதால், சட்ட விரோத செயல்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு தீர்வு காண வேண்டும்.
மேலும், வன எல்லையிலிருந்து, பல கி.மீ., துாரத்திலுள்ள விவசாய விளை நிலங்களில் முகாமிட்டுள்ள காட்டுப்பன்றிகள், மக்காச்சோளம், காய்கறி, தென்னை உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்து வருகின்றன.
இவற்றை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வேண்டும். பயிர்க்காப்பீடு செய்துள்ள பயிர்கள் சேதமடைந்துள்ள நிலையில், உரிய இழப்பீட்டு தொகை பெற்றுத்தரவும் வேண்டும்.
இவ்வாறு, அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.