/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
களைக்கொல்லியால் அழுகிய நெற்பயிர் கலெக்டரிடம் விவசாயிகள் கண்ணீர்
/
களைக்கொல்லியால் அழுகிய நெற்பயிர் கலெக்டரிடம் விவசாயிகள் கண்ணீர்
களைக்கொல்லியால் அழுகிய நெற்பயிர் கலெக்டரிடம் விவசாயிகள் கண்ணீர்
களைக்கொல்லியால் அழுகிய நெற்பயிர் கலெக்டரிடம் விவசாயிகள் கண்ணீர்
ADDED : நவ 30, 2024 02:26 AM
திருப்பூர்:அமராவதி பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தில், அதிக அளவு நெல் பயிரிடப்படுகிறது. காவிரி டெல்டா பகுதிகளில் சாகுபடி செய்வதற்கான, 70 சதவீத விதை நெல், தாராபுரம் சுற்றுப்பகுதியில் உற்பத்தியாகிறது.
அமராவதி பாசனத்தில், சம்பா மற்றும் குறுவை சாகுபடியாக, நெல் பயிரிடப்படுகிறது. வயலை பண்படுத்தி, நெற்பயிர் சாகுபடி செய்த, 15 நாட்களுக்கு பின் களைக்கொல்லி மருந்து அடிக்கப்படும்.
களைகளை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த மருந்து அடிக்கப்படுகிறது. அதன்படி, களைக்கொல்லி மருந்து அடித்த வயல்களில், நெற்பயிர்களும் அழுகிவிட்டதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
குறிப்பாக, மடத்துக்குளம் தாலுகா பகுதியில், களைக்கொல்லி மருந்து அடித்த வயல்களில் நெற்பயிர் அழுகிவிட்டதாக, திருப்பூர் மாவட்ட குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கண்ணீர் மல்க முறையிட்டனர்.
விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மதுசூதனன் பேசுகையில், “மடத்துக்குளம் துவங்கி, தாராபுரம் வரை, நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டது. நாற்று நட்ட, 15 நாளுக்கு பின், வழக்கம்போல் களைக்கொல்லி மருந்து அடித்தனர். களையுடன், நெற்பயிர்களும் அழுகி விட்டன. ஏக்கருக்கு, 30,000 ரூபாய் வரை செலவழித்தது வீணாகப் போய்விட்டது,” என்றார்.
கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசுகையில், “களைக்கொல்லியால் பாதிக்கப்பட்டதாக புகார் கூறப்படும் பகுதியில், வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் குழு களஆய்வு மேற்கொள்ளும்.
''பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, உரிய இழப்பீடு வழங்கவும் ஆவண செய்யப்படும்,” என்றார்.