/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேலைவாய்ப்புடன் கூடிய பேஷன் டிசைனிங் பயிற்சி
/
வேலைவாய்ப்புடன் கூடிய பேஷன் டிசைனிங் பயிற்சி
ADDED : அக் 30, 2025 11:49 PM
திருப்பூர்:  அப்பேரல் டிரெய்னிங் மற்றும் டிசைனிங் சென்டரில் (ஏ.டி.டி.சி.,) ஓராண்டு டிப்ளமோ மற்றும் பேஷன் டிசைனிங் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவியர், இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
முன்னணி பிராண்ட்களில் ஒன்றான, 'கேப்' நிறுவனம், சர்வீசஸ் இந்தியா நிறுவனம் வாயிலாக, இந்தாண்டு கல்வி உதவி வழங்க முன்வந்துள்ளது.
'அப்பேரல் உற்பத்தி தொழில்நுட்பம்' வாயிலாக, ஆடை தயாரிப்பு முறை, தரக்கட்டுப்பாடு, மற்றும் தொழில்நுட்ப அறிவு பெறலாம். இது வேலை வாய்ப்பு மற்றும் தொழில் முனைவு வளர்ச்சிக்குப் பயனளிக்கும்.
'பேஷன் டிசைனிங்' படிப்பால் படைப்பாற்றல், ஆடை வடிவமைப்பு, மற்றும் நவீன டிசைன் கருவிகளில் திறமை பெறலாம். இது பேஷன் துறையில் சிறந்த வாய்ப்புகளை உருவாக்கும்.
பிளஸ் 2 தேர்வில், 60 சதவீத்துக்கும் அதிகமாக மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற்ற, 18 முதல் 35 வயது வரை உள்ள மாணவிகள், சலுகை கட்டணத்தில் கல்வி பயிலலாம்.
இதுதவிர, 60 முதல் 70 சதவீதத்துக்குள் மதிப்பெண் பெற்ற மாணவிகள், 20 சதவீத கட்டணமாக, 19 ஆயிரத்து, 500 ரூபாய் மட்டும் செலுத்தலாம் மேலும், 70 சதவீதத்துக்கும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள், 10 சதவீத கட்டணமாக 9,500 ரூபாய் மட்டும் செலுத்தி, ஓராண்டு பயிற்சி பெறலாம்.
பயிற்சி வகுப்பு, திருப்பூர் - இந்திரா நகரில் உள்ள ஏ.இ.பி.சி., கட்டடத்தில் உள்ள ஏ.டி.டி.சி., மையத்தில் நேரடியாக நடக்கும்.
பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு ஆடை உற்பத்தி துறையில் வேலைவாய்ப்பு பெற்று தரப்படும்.
விருப்பம் உள்ள மாணவிகள் 88700 08553, 94864 75124 என்ற எண்களில் அணுகலாம் என, நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

