/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இடிந்து விழும் வீடுகளால் அச்சம்; மலைவாழ் மக்கள் வேதனை
/
இடிந்து விழும் வீடுகளால் அச்சம்; மலைவாழ் மக்கள் வேதனை
இடிந்து விழும் வீடுகளால் அச்சம்; மலைவாழ் மக்கள் வேதனை
இடிந்து விழும் வீடுகளால் அச்சம்; மலைவாழ் மக்கள் வேதனை
ADDED : செப் 20, 2024 10:04 PM
உடுமலை : திருமூர்த்திமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பில், இடிந்து விழும் நிலையிலுள்ள வீடுகளை புதுப்பிக்க அரசு நிதி ஒதுக்க அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை திருமூர்த்திமலையில், படகுத்துறை அருகே, மலைவாழ் மக்களுக்கு கடந்த 1984ல், அரசால் 120 வீடுகள் கட்டித்தரப்பட்டது. அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மக்களுக்கு, சிறப்பு திட்டத்தின் கீழ் இவ்வீடுகள் கட்டித்தரப்பட்டன.
போதிய வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் இல்லாத நிலையில், இப்பகுதி மக்கள் பராமரிப்பில்லாத வீடுகளில் வசித்து வருகின்றனர். வீடுகள் கட்டப்பட்டு நீண்ட காலமாகியுள்ளதால், மேற்கூரை, சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
மழைக்காலங்களில், ஒவ்வொரு ஆண்டும் வீடுகள் இடிந்து விழுந்து அங்கு வசிப்பவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வீடுகளை பராமரிக்க நிதி இல்லாததால், வீடுகளின் வெளிப்புறத்தில், சிறிய பந்தல் அமைத்து இரவில் துாங்குகின்றனர்.
முன்பு, உள்ளாட்சி தேர்தலில், அப்பகுதி மக்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்படவில்லை. கடந்த உள்ளாட்சி தேர்தலில், தளி பேரூராட்சியுடன் மலைவாழ் கிராம குடியிருப்பு சேர்க்கப்பட்டது.
எனவே, தளி பேரூராட்சி நிர்வாகம் வாயிலாக பராமரிப்பில்லாத வீடுகளை புதுப்பிக்கவும், புதிதாக தொகுப்பு வீடுகள் கட்டித்தரவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடியிருப்பில் அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தி தர வேண்டும்என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.