/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேலியில் சிக்கிய பெண் சிறுத்தை: பல மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்பு

ADDED : நவ 13, 2025 11:23 PM

பந்தலுார்: பந்தலுார் அருகே, தோட்டத்தின் கம்பி வேலியில் சிக்கிய பெண் சிறுத்தை பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், பந்தலுார் பஜார் பகுதியை ஒட்டி இரும்புபாலம் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள தேயிலை தோட்டத்தில் கம்பி வேலியில் நேற்று முன்தினம் இரவு சிறுத்தை ஒன்று சிக்கி கொண்டது.
நேற்று காலை இதனை பார்த்த பொதுமக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, வனச்சரகர்கள் சஞ்சீவி, ரவி, அய்யனார் தலைமையிலான வனக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். சிறுத்தை ஆக்ரோஷமாக இருந்ததால், மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, கோத்தகிரியில் இருந்து முதுமலை புலிகள் காப்பக டாக்டர் ராஜேஷ்குமார் வரவழைக்கப்பட்டு, பெண் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது.
பின்னர், சிறுத்தையின் காலில் சிக்கி இருந்த கம்பி அகற்றப்பட்டு, சிறுத்தைக்கு உடல் சோர்வாக இருந்ததால், குளுக்கோஸ் செலுத்தப்பட்டது. பின்னர் கூண்டில் ஏற்றி முதுமலை புலிகள் காப்பகத்தில் விடுவதற்காக கொண்டு செல்லப்பட்டது.