UPDATED : நவ 08, 2026 04:55 PM
ADDED : நவ 08, 2026 03:50 PM

திருப்பூர்: தீபாவளி பண்டிகை எதிரொலியாக, திருப்பூர் தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டில் வரத்தும் விற்பனையும் மந்தமடைந்தன. வழக்கமாக தினமும் 180 முதல் 220 டன் வரை காய்கறிகள் விற்பனைக்கு வரும் நிலையில், உள்ளூர் காய்கறிகளான கத்தரி, அவரை, வெண்டை, பீர்க்கன், பாகற்காய் உள்ளிட்டவற்றின் வரத்து குறைந்திருந்தது. அதேசமயம், மலைக்காய்கறிகளின் வரத்து வழக்கம்போல் இருந்தது. பண்டிகையால் மொத்த வியாபாரிகள் வருகையும் குறைந்ததால் விற்பனை சரிந்தது. வரத்து குறைந்தாலும் விற்பனையும் மந்தமாக இருந்ததால் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை. செவ்வாய்க்கிழமைக்குப் பின்னரே மார்க்கெட் இயல்பு நிலைக்குத் திரும்பும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டுக்கு பொதுமக்கள் குறைந்த அளவிலேயே வந்திருந்தனர்.
