sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வாக்காளர் இறுதி பட்டியல் வெளியீடு.. திருப்பூர் மாவட்டத்தில் 24,15,608 வாக்காளர்!

/

வாக்காளர் இறுதி பட்டியல் வெளியீடு.. திருப்பூர் மாவட்டத்தில் 24,15,608 வாக்காளர்!

வாக்காளர் இறுதி பட்டியல் வெளியீடு.. திருப்பூர் மாவட்டத்தில் 24,15,608 வாக்காளர்!

வாக்காளர் இறுதி பட்டியல் வெளியீடு.. திருப்பூர் மாவட்டத்தில் 24,15,608 வாக்காளர்!


ADDED : ஜன 07, 2025 07:03 AM

Google News

ADDED : ஜன 07, 2025 07:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் இறுதி பட்டியல், 24 லட்சத்து 15 ஆயிரத்து 608 வாக்காளர் உள்ளனர்; சுருக்கமுறை திருத்தில், கூடுதலாக 32,788 பேர் சேர்ந்துள்ளனர்.

தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், கலெக்டர் கிறிஸ்துராஜ், திருத்தப்பட்ட வாக்காளர் இறுதி பட்டியலை வெளியிட்டார்.

இறுதிபட்டியல் படி, திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், 11 லட்சத்து 82 ஆயிரத்து 905 ஆண்; 12 லட்சத்து 32 ஆயிரத்து 351 பெண்; 352 திருங்கை என, மொத்தம் 24 லட்சத்து 15 ஆயிரத்து 608 வாக்காளர்கள் உள்ளனர்.

தாராபுரத்தில், மொத்தம் 2 லட்சத்து 63 ஆயிரத்து 790; காங்கயத்தில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 248; அவிநாசியில் 2 லட்சத்து 92 ஆயிரத்து 817; திருப்பூர் வடக்கு தொகுதியில் 4 லட்சத்து 19 ஆயிரத்து 20; திருப்பூர் தெற்கு தொகுதியில் 2 லட்சத்து 71 ஆயிரத்து 749; பல்லடத்தில், 4 லட்சத்து 10 ஆயிரத்து 71; உடுமலையில், 2 லட்சத்து 68 ஆயிரத்து 918; மடத்துக்குளத்தில், 2 லட்சத்து 40 ஆயிரத்து 95 வாக்காளர்கள் இறுதிபட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

17,723 பேர் நீக்கம்

சுருக்கமுறை திருத்த காலத்தில் பெறப்பட்ட படிவம் 6 மற்றும் படிவம் 8 விண்ணப்பங்கள் அடிப்படையில், 23 ஆயிரத்து 70 ஆண்கள்; 27 ஆயிரத்து 439 பெண்கள்; திருநங்கைகள் 2 பேர் என, மொத்தம் 50 ஆயிரத்து 511 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். படிவம் 7ன் படி, 8,362 ஆண்; 9,354 பெண்; 7 திருநங்கைகள் என, மொத்தம் 17 ஆயிரத்து 723 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நீக்கப்பட்ட 17 ஆயிரத்து 723 வாக்காளர்களில், 1,351 பேர் இறந்தவர்கள்; 15,857 பேர் இடம்பெயர்ந்து சென்றவர்கள்; 515 பேர் இரட்டை பதிவு காரணமாக நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

எண்ணிக்கை உயர்வு


திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு பட்டியல்படி, 11 லட்சத்து 68 ஆயிரத்து 197 ஆண்; 12 லட்சத்து 14 ஆயிரத்து 266 பெண்; 357 திருநங்கை என, மொத்தம் 23 லட்சத்து 82 ஆயிரத்து 820 வாக்காளர் இருந்தனர். பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தங்களை உள்ளடக்கிய சுருக்கமுறை திருத்தத்துக்குப்பின், தற்போது கூடுதலாக 32 ஆயிரத்து 788 வாக்காளர் சேர்க்கப்பட்டு, மொத்த வாக்காளர் எண்ணிக்கை, 24 லட்சத்து 15 ஆயிரத்து 608 ஆக உயர்ந்துள்ளது.

சரிபார்த்துக் கொள்ளுங்க...

நேற்று வெளியிடப்பட்ட வாக்காளர் இறுதி பட்டியல், திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஆர்.டி.ஓ., அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள், இறுதி பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா என சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.சுருக்கமுறை திருத்தம் முடிந்தாலும்கூட, தொடர் திருத்த காலத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் செய்வதற்கு, https://voterportal.eci.gov.in என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.








      Dinamalar
      Follow us