/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கைதான நிதி நிறுவன உரிமையாளர் 17 மாநிலங்களில் மோசடி அம்பலம்
/
கைதான நிதி நிறுவன உரிமையாளர் 17 மாநிலங்களில் மோசடி அம்பலம்
கைதான நிதி நிறுவன உரிமையாளர் 17 மாநிலங்களில் மோசடி அம்பலம்
கைதான நிதி நிறுவன உரிமையாளர் 17 மாநிலங்களில் மோசடி அம்பலம்
ADDED : அக் 21, 2024 12:41 AM

திருப்பூர்: மதுரையை சேர்ந்தவர் முத்தையன், 48; திருப்பூர், பி.என்., ரோட்டில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். முதலீடு செய்தால், அதிக வட்டி கொடுப்பதாக கூறி விளம்பரம் செய்தார். நம்பி, நிறுவனத்தில் 2018 முதல் பணத்தை பலரும் முதலீடு செய்தனர்.
அறிவித்தபடி வட்டியுடன், பணம் கொடுக்காமல், காலம் கடத்தினார். ஏமாந்தவர்கள் திருப்பூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.
முதலீடு செய்யும் பணத்துக்கு, 12 சதவீதம் வட்டி தருவதாக கூறி, 211 பேரிடம், 10 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.
மோசடி தொடர்பாக, முத்தையன், அவரது மனைவி மஞ்சு, 47, மகன் கிரண்குமார், 22, உட்பட, ஏழு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முத்தையன், கிரண்குமார் உட்பட நான்கு பேரை கைது செய்தனர்.
முத்தையன், கிரண்குமார் ஆகியோரிடம், இரண்டு நாள் கஸ்டடி எடுத்து விசாரித்தனர். இவர்கள் தங்கியிருந்த வீட்டிலும், மூன்று மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தினர்.
மீண்டும் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
போலீசார் கூறுகையில், 'பங்கு சந்தையில் முதலீடு செய்ய விரும்பும் நபர்களிடம், பணத்தை பெற்று, முதலீடு செய்து லாபம் பெற்று தருவதாக நம்பிக்கை கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
'கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நபர்கள் முதலீடு தொடர்பாக கிரண்குமாரின் வங்கி கணக்குக்கு பணம் அனுப்பியது தெரிய வந்துள்ளது.
'ஏமாந்தவர்கள் அந்தந்த மாநில சைபர் கிரைம் போலீசாரிடம் இவர்கள் மீது புகார் அளித்துள்ளனர். கேரளா உள்ளிட்ட, 17 மாநில போலீசார், இவர்களை தேடுவதும் தெரியவந்துள்ளது' என்றனர்.