/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொங்கல் வைத்த போது தீ: 3 பேருக்கு தீக்காயம்
/
பொங்கல் வைத்த போது தீ: 3 பேருக்கு தீக்காயம்
ADDED : ஏப் 15, 2025 11:46 PM
திருப்பூர்; திருப்பூர், அணைக்காட்டை சேர்ந்தவர் பழனிசாமி, 57. இவரது மனைவி ராதா, 50. மகன் அசோக்குமார், 30. பழனிசாமி ஓவியராக உள்ளார்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, நேற்று முன்தினம் வீட்டின் முன்பு ராதா விறகு அடுப்பில் பொங்கல் வைத்தார். அப்போது அடுப்பு எரிவதற்கு டர்பன் ஆயிலை ராதா ஊற்றினார்.
அருகில் இருந்து இதை பார்த்த பழனிசாமி,அதை ஊற்ற வேண்டாம் என தடுக்க சென்றவர், இவர் மீது ஆயில்கொற்றி, இருவர் மீது தீ பிடித்தது.
அவர்களை காப்பாற்ற சென்ற அசோக்குமாருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. அருகில் வசித்தவர்கள் மூவரையும் மீட்டுதிருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். திருப்பூர் வடக்கு போலீசார்விசாரிக்கின்றனர்.

