UPDATED : ஜூலை 19, 2026 09:05 PM
ADDED : ஜூலை 19, 2026 09:01 PM
திருப்பூர்:திருப்பூர் மாவட்ட பூப்பந்தாட்ட கழகம் சார்பில், மிக இளையோர், இளையோர் மற்றும் மூத்தோருக்கான மாவட்ட அளவிலான ஐவர் தேர்வு திறன் பூப்பந்தாட்டப் போட்டி, திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லுாரியில் நடைபெற்றது.
ஆண்கள், பெண்கள் என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் 200 பேர் பங்கேற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் தலா 10 பேர் வீதம் மொத்தம் 60 வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் திருப்பூர் மாவட்ட அணி சார்பில் மாநில போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
ஏற்பாடுகளை மாவட்ட தலைவர் நாச்சிமுத்து, செயலாளர் செல்வராஜ், பொருளாளர் குமரவேல் ஆகியோர் செய்திருந்தனர். மாநில துணைத் தலைவர் பாலகுமார், மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது, பழனிசாமி, லோகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
---
வீரர், வீராங்கனைகள் தேர்வுக்காக, மாவட்ட அளவிலான ஐவர் திறன் பூப்பந்தாட்டப் போட்டி நடந்தது.
