/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருமூர்த்திமலை கோவிலை சூழ்ந்த வெள்ளம்; ஆடிப்பெருக்கு தினத்தில் அதிசயம்
/
திருமூர்த்திமலை கோவிலை சூழ்ந்த வெள்ளம்; ஆடிப்பெருக்கு தினத்தில் அதிசயம்
திருமூர்த்திமலை கோவிலை சூழ்ந்த வெள்ளம்; ஆடிப்பெருக்கு தினத்தில் அதிசயம்
திருமூர்த்திமலை கோவிலை சூழ்ந்த வெள்ளம்; ஆடிப்பெருக்கு தினத்தில் அதிசயம்
ADDED : ஆக 04, 2025 12:18 AM

உடுமலை; உடுமலை திருமூர்த்திமலையில் பெய்த மழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, அருவி மற்றும் கோவில் வளாகத்திலிருந்து பக்தர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், ஆடிப்பெருக்கு தினமான நேற்று, பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணியர் வந்திருந்தனர்.
வழக்கம் போல், அருவியில் குளித்தும், மலையடிவாரத்திலுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் மும்மூர்த்திகளை வழிபட்டனர். மதியம், 1:00 மணியளவில், மேல் மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதாக வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். அருவியில் வெள்ளப்பெருக்கு அபாயம் காரணமாக, உடனடியாக அருவியில் குளித்துக்கொண்டிருந்த நுாற்றுக்கணக்கானவர்களை, வனத்துறையினர், கோவில் ஊழியர்கள், போலீசார், தீயணைப்பு துறையினர் இணைந்து, பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட நிலையில், மதியம், 2:30 மணிக்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
அதே போல், மலையடிவாரத்திலுள்ள தோணியாற்றிலும் காட்டாற்று வெள்ளம் ஏற்படும் என்பதால், கோவில் நடை சார்த்தப்பட்டு, கோவில் வளாகத்திலிருந்த பக்தர்களும் வெளியேற்றப்பட்டனர். தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில், மதியம், 3:00 மணிக்கு, கோவில் வளாகத்தையும் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது. முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையால், பாதிப்புகள் தவிர்க்கப்பட்டது.ஆடிப்பெருக்கு தினமான நேற்று, திருமூர்த்திமலை அருவி மற்றும் கோவில் வளாத்தில் வெள்ளப்பெருக்கு எற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.