ADDED : ஜன 09, 2025 11:36 PM
திருப்பூர்; திருப்பூர் பூ மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ, 2,000 - 2,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
முல்லைப்பூ, 1,500 - 1,800. காகட்டா பூ, 1,200 - 1,400, செவ்வந்தி கிலோ, 220, சம்மங்கி, 190, அரளி, 250 ரூபாய்க்கு விற்றது. வழக்கமாக விற்கும் விலையை விட பூ விலை உயர்ந்ததால், நேற்று பூ மார்க்கெட்டில் பூ வாங்க கூட்டம் குறைந்திருந்தது.
வாடிக்கையாளர்கள் குறைந்த நிலையிலும், பூ வரத்து குறைவு என்பதால், மாலை வரை பூ விலை உயர்ந்தே இருந்தது.
பூ வியாபாரிகள் கூறுகையில், 'தற்போது விசேஷ விற்பனை என்பது குறைவு தான். கடும்பனி காரணமாக பூ வரத்தே இல்லை. ஒரு டன் மல்லிகை பூ வந்த மார்க்கெட்டுக்கு, 100 - 150 கிலோ வருவதே அரிதாக உள்ளது. மல்லிகை பூ வரத்து இல்லாததால், முல்லை, காக்கடா பூக்கள் விலை உயர்ந்துள்ளது. பனி குறைந்து, வெயில் வந்து இயல்பு திரும்பி, வரத்து அதிகரித்தால், பூ விலை குறைய வாய்ப்புள்ளது,' என்றனர்.