
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி, ; துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளையொட்டி, கருவலுாரில், திருமுருகன் பூண்டி ஒன்றிய தி.மு.க., சார்பில், கால்பந்து போட்டி நடைபெற்றது.
அமைச்சர் சாமிநாதன் போட்டிகளை துவக்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் அவிநாசியப்பன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் கோபிநாத், மாவட்ட விவசாய அணி தலைவர் லோகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கோபால், சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் மகிழவன், ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி சந்தோஷ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.