/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜி.வி.ஜி., கல்லுாரியில் நிறுவனர் நாள் விழா
/
ஜி.வி.ஜி., கல்லுாரியில் நிறுவனர் நாள் விழா
ADDED : செப் 10, 2025 09:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரியில் நிறுவனர் பிறந்த நாள் விழா, கொண்டாடப்பட்டது.
உடுமலை - பழநி ரோட்டிலுள்ள இக்கல்லுாரியில் நடந்த இவ்விழாவில், கல்லுாரி செயலாளர் சுமதி முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் கற்பகவள்ளி, இயக்குனர் மஞ்சுளா மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடந்தது.
மாணவியர் பக்தி பாடல்களை பாடினர். நிகழ்ச்சியில், கல்லுாரி மாணவியர், அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கல்லுாரி பேரவை உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.