/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வட்டார விளையாட்டு போட்டி; வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
/
வட்டார விளையாட்டு போட்டி; வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
வட்டார விளையாட்டு போட்டி; வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
வட்டார விளையாட்டு போட்டி; வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : செப் 10, 2025 09:41 PM

உடுமலை; கோமங்கலம்புதுார் வித்யநேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், வட்டார அளவிலான விளையாட்டுபோட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், பொள்ளாச்சி கிழக்கு பகுதிகளுக்கான பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டி, விஸ்வதீப்தி பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
இப்போட்டியில் பல்வேறு பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். அதில், கோமங்கலம்புதுார் வித்யநேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். 400 மீ. தொடர் ஓட்டம், 3000 மீ. 1500 மீ. போட்டிகளிலும் மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இப்பள்ளி மாணவி மிருணாளினி, தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்று, மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார்.
வெற்றி பெற்ற மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர் லோகேஷ் பாண்டியன் உள்ளிட்டோருக்கு பள்ளி தாளாளர் நந்தகோபாலகிருஷ்ணன், பள்ளி முதல்வர் கோபாலகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்தனர்.