
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்; கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையை சேர்ந்தவர் கனகராஜ், 38; முந்திரி வியாபாரி. இவரிடம், 2024 பிப்., 22ல், திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே காரணம்பேட்டையை சேர்ந்த ஜெமிஷா, 35, என்பவர் போனில் தொடர்பு கொண்டு, ஒன்றரை டன் முந்திரி பருப்பு வாங்கினார். அதற்கான, 9 லட்சம் ரூபாயை தராமல் இழுத்தடித்த ஜெமிஷா, மாயமானார். கனகராஜ் புகாரின் பேரில், பல்லடம் போலீசார், 2024 ஆக., 2ம் தேதி ஜெமிஷாவை கைது செய்தனர்.
கோர்ட் அவரை நிபந்தனை ஜாமினில் விடுவித்தது. ஓரிரு நாட்கள் பல்லடம் ஸ்டேஷனில் கையெழுத்திட்ட ஜெமிஷா, மீண்டும் மாயமானார். இந்நிலையில், கோவையில் வைத்து ஜெமிஷாவை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.