/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய திறனறித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
/
தேசிய திறனறித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
ADDED : நவ 22, 2024 11:04 PM
உடுமலை: தேசிய வருவாய்வழி திறனறித்தேர்வுக்கு, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது.
அரசுப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, கல்வியாண்டு தோறும் தேசிய வருவாய்வழி திறனறித்தேர்வு நடத்தப்படுகிறது.
இத்தேர்வில் வெற்றி பெறுவோருக்கு, அவர்களின் பள்ளிக்கல்வி நிறைவு பெறும் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. நடப்பாண்டுக்கான தேர்வு, 2025, பிப்., மாதம் நடக்க உள்ளது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உடுமலை கிளை சார்பில், இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
உடுமலை மீனாட்சி திருமண மண்டபத்தில், இன்று பயிற்சி வகுப்பின் துவக்க விழா நடக்கிறது. பயிற்சி வகுப்புகள் சனிக்கிழமை தோறும் காலை, 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை நடக்கிறது. சனிக்கிழமை பள்ளி செயல்படும் நாட்களில், ஞாயிற்றுகிழமைகளில், அதே நேரத்தில் பயிற்சி வகுப்பு நடக்கிறது. பள்ளி மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் அறிவித்துள்ளனர்.