/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இலவச கண் சிகிச்சை முகாம்; கிராம மக்கள் பங்கேற்பு
/
இலவச கண் சிகிச்சை முகாம்; கிராம மக்கள் பங்கேற்பு
ADDED : செப் 21, 2025 10:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், உடுமலை லயன்ஸ் சங்கம், லயன்ஸ் சங்க அறக்கட்டளை, அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், இலவச கண் சிகிச்சை மற்றும் 'ஆர்த்தோ' முகாம் குடிமங்கலத்தில் நடந்தது.
கோட்டமங்கலம் முன்னாள் ஊராட்சித்தலைவர் வேலாயுதசாமி தலைமை வகித்தார். அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் திருப்பூர் பாலா 'ஆர்த்தோ' மருத்துவமனை டாக்டர்கள் பரிசோதித்தனர்.
சுற்றுப்பகுதி கிராமங்களைச்சேர்ந்த திரளான மக்கள் பங்கேற்றனர்; 11 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். உடுமலை லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பார்த்தசாரதி, காந்திராஜ், ஸ்ரீதர், விஷ்ணு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.