/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆயிரம் மாணவியருக்கு இலவச மருத்துவ முகாம்
/
ஆயிரம் மாணவியருக்கு இலவச மருத்துவ முகாம்
ADDED : செப் 02, 2025 11:10 PM

திருப்பூர்; திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரியில், ஆயிரம் மாணவியருக்கான பொது, கண் மற்றும் பல் மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருப்பூர், மங்கலம் ரோட்டிலுள்ள குமரன் மகளிர் கல்லுாரி நுண்ணுயிரியல் துறை, திருப்பூர் ஆதார் மருத்துவமனை, அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் முருகன் பல் மருத்துவமனையும் இணைந்து கல்லுாரி பேராசிரியர்கள் மற்றும் மாணவியருக்கான பொது மருத்துவ முகாம், கண் மருத்துவ முகாம் மற்றும் பல் மருத்துவ முகாம் கல்லுாரி வளாகத்தில் நடைபெற்றது.
முகாமை கல்லுாரி முதல்வர் வசந்தி துவக்கி வைத்தார். இதில் ஆதார் மருத்துவமனையின் மருத்துவர்கள் சபரிகணேசன் மற்றும் ஹரிப்பிரியா, முருகன் பல் மருத்துவமனையின் மருத்துவர் தர்சனா, அகர்வால் கண் மருத்துவமனையின் குழுவினர்களும் பங்கேற்று மாணவியருக்கு உடல் நலம் குறித்த ஆலோசனைகளை வழங்கினர். கல்லுாரியின் நிர்வாக அலுவலர் நிர்மல்ராஜ் மேற்பார்வையில், இம்முகாம் நடந்தது. நுண்ணுயிரியல் துறை உமாமகேஸ்வரி மற்றும் ராசிதா பர்வின் ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.