ADDED : மார் 11, 2024 01:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நல சங்கத்தின், 12ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, டி.சி.சி.எல்., டி.சி.ஓ.ஏ., பப்ளிக் பவுண்டேசன், ஸ்ரீ குமரன் மருத்துவமனை, வாசன் கண் மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நேற்று நடந்தது.
திருப்பூர் ஜீவா காலனி, தொழிலாளர்கள் கூட்டுறவு திருமண மண்டபத்தில் நடந்த முகாமை டி.சி.சி.எல்., மாவட்ட தலைவர் வீரமுத்து துவக்கி வைத்தார். 130 பேருக்கு மருத்துவ பரிசோதனை, 125 பேருக்கு கண், 40 பேருக்கு இருதய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. செயலாளர் பிரகாஷ் ஒருங்கிணைத்தார்.

