/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய தடகளப் போட்டியில் பிரன்ட்லைன் மாணவர் 'தங்கம்'
/
தேசிய தடகளப் போட்டியில் பிரன்ட்லைன் மாணவர் 'தங்கம்'
தேசிய தடகளப் போட்டியில் பிரன்ட்லைன் மாணவர் 'தங்கம்'
தேசிய தடகளப் போட்டியில் பிரன்ட்லைன் மாணவர் 'தங்கம்'
ADDED : செப் 18, 2025 11:30 PM

திருப்பூர்; தேசிய தடகளப் போட்டியில், பிரன்ட்லைன் மாணவர் 'தங்கம்' வென்றார்.
சி.பி.எஸ்.இ., தேசிய தடகள விளையாட்டுப் போட்டிகள் வாரணாசியில் உள்ள சாண்ட் அதுலானந்த் பள்ளியில் நடந்தது. இதில், இந்தியாவின், 28 மாநிலங்களிலிருந்தும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 17 வயதுக்குட்பட்ட பிரிவில், உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகம் சார்பாக திருப்பூர் மாவட்டத்தின் பிரன்ட்லைன் மில்லேனியம் பள்ளியைச் சேர்ந்த, பிளஸ் 2 மாணவர் பிரணவ் அருண் பங்கேற்று, 1.87 மீ., தாண்டி தங்கப்பதக்கம் வென்றார்.
போட்டியில் வெற்றி பெற்று, தமிழகத்துக்கும், திருப்பூர் மாவட்டத்துக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவர், அவருக்கு உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் நந்தகுமார் இருவரையும், கலெக்டர் மனிஷ் நாரணவரே, பள்ளியின் முதல்வர் லாவண்யா, தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, இயக்குனர் சக்தி நந்தன், துணை செயலாளர் வைஷ்ணவி, தலைமையாசிரியர் கமலாம்பாள் ஆகியோர் பாராட்டினர்.