/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகம் செயல்பாடு
/
புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகம் செயல்பாடு
ADDED : அக் 11, 2024 11:45 PM
திருப்பூர் : திருப்பூர், அவிநாசி ரோடு, குமார் நகரில், 2.25 ஏக்கர் நிலத்தில் பிரமாண்டமாக அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை கடந்த, 7ம் தேதி முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
புதிய கமிஷனர் அலுவலகத்துக்கு, அனைத்து அலுவலகங்களையும் இடமாற்றம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கமிஷனர் அறை உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் உடனடியாக மாற்றப்பட்டு புதிய அலுவலகத்தில் இயங்க ஆரம்பித்து விட்டது. இன்னும் சில நாட்களில் முழுமையாக, அனைத்து அலுவலகங்களும் புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டு விடும் என்று போலீசார் தெரிவித்தனர். இனிவரும் காலங்களில், பொதுமக்கள், புதிய அலுவலகத்தில் கமிஷனரை சந்தித்து தங்களின் புகார் மனுக்களை அளிக்கலாம்.