/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புற்றுநோய் பாதித்தோருக்காக கல்லுாரி மாணவியர் முடி தானம்
/
புற்றுநோய் பாதித்தோருக்காக கல்லுாரி மாணவியர் முடி தானம்
புற்றுநோய் பாதித்தோருக்காக கல்லுாரி மாணவியர் முடி தானம்
புற்றுநோய் பாதித்தோருக்காக கல்லுாரி மாணவியர் முடி தானம்
ADDED : பிப் 20, 2025 11:56 PM
திருப்பூர்; புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடி தானம் வழங்க, கல்லுாரி மாணவிகள் ஆர்வம் காட்டினர்.
திருப்பூர், புனித ஜோசப் பெண்கள் கல்லுாரி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் துறையுடன் இணைந்து, 'யங் இண்டியா திருப்பூர் அக்சசிபிலிட்டி வெர்டிகல்' அமைப்பு இணைந்து, முடிதான முகாம் நடத்தின. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக முடி இழந்தவர்களுக்கு, முடி வழங்கும் நோக்கில், இம்முகாம் நடத்தப்பட்டது.
கல்லுாரி முதல்வர் டாக்டர் சகாய தமிழ்ச்செல்வி, கல்லுாரி செயலர் டாக்டர் ெஹலன், துறை தலைவர் வினோதினி, அமைப்பாளர் நித்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். யங் இண்டியா அமைப்பின் தலைவர் மோகன், இணை தலைவர் விமல், நிர்வாகிகள் நிரஞ்சன், லலித்குமார், நேதாஜி மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் சக்தி மிருதுளா, சுவி ஆகியோர், முடி தானம் செய்வதன் அவசியம், யங் இண்டியா அமைப்பின் செயல்பாடு குறித்து பேசினர். கல்லுாரி மாணவிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட, 75 பேர் தங்களது முடியை தானம் செய்தனர்.

