/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விநாயகர் சதுர்த்தி விழா விளையாட்டு போட்டி
/
விநாயகர் சதுர்த்தி விழா விளையாட்டு போட்டி
ADDED : ஆக 28, 2025 05:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்; பல்லடம் மாணிக்காபுரம் ரோடு, பெரியார் நகரில், விவேகானந்தர் நற்பணி மன்றம் சார்பில், 22ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, காலை, சிறப்பு பூஜைகள் நடந்தன.
தொடர்ந்து, கும்மியாட்டம் ஆடியபடி முளைப்பாலிகை எடுத்து ஊர்வலம் வந்த பெண்கள், விநாயகர் முன் வைத்து வழிபட்டனர். அதன்பின், சிறுவர் சிறுமியருக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
l ஜெ.கே.ஜெ., காலனி ஊர் பொதுமக்கள் சார்பிலும், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. சிறுவர், சிறுமியருக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசளிக்கப்பட்டது.