ADDED : டிச 29, 2025 05:17 AM

பெருமாநல்லூர்: திருப்பூர் ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சி, பாலாஜி நகர் குட்டை தோட்டம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இங்கு பயனற்ற தரைமட்ட பெரிய கிணறு ஒன்று உள்ளது. கிணற்றில் இருவர் தவறி விழுந்து இறந்துள்ளனர்.
அப்பகுதியினர் சிலர் கிணறு பாதுகாப்பற்ற முறையிலும், பயனற்ற நிலையிலும் உள்ளதால், குப்பையோ, மண்ணோ போட்டு கிணற்றை மூடி தரும்படி திருப்பூர் மேயரிடம் மனு கொடுத்துள்ளனர்.
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் நேற்று கிணற்றில் குப்பை கொட்டும் பணியை மேற்கொண்டனர்.
இதையறிந்த அப்பகுதியினர் குப்பை கொட்டினால் துர்நாற்றம் வீசும்; குடியிருக்க முடியாது; நிலத்தடி நீர் பாதிக்கும் எனக்கூறி,குப்பை கொட்ட வந்த லாரியை சிறை பிடித்தனர்.
மாநகராட்சி அதிகாரிகள் குப்பையை திருப்பி எடுத்து சென்றனர். அங்கு வந்த எம்.எல்.ஏ. விஜயகுமாரிடம், பொதுமக்கள், கிணற்றை மண் போட்டு மூடி தரும்படி கூறினர். அதற்கு அவர் மூடி தருவதாக உறுதி கூறினார்.

