/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்; முதிர்வு தொகைக்கு விண்ணப்பம்
/
பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்; முதிர்வு தொகைக்கு விண்ணப்பம்
பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்; முதிர்வு தொகைக்கு விண்ணப்பம்
பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்; முதிர்வு தொகைக்கு விண்ணப்பம்
ADDED : டிச 05, 2024 06:15 AM
திருப்பூர்; கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:
முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பிப்போருக்கு, தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம் மூலம், ஒரு பெண் குழந்தை எனில் 50 ஆயிரம் ரூபாய்; 2 பெண் குழந்தைகள் எனில், தலா 25 ஆயிரம் ரூபாய் சேமிப்பு பத்திரமாக வழங்கப்படுகிறது.
அந்த குழந்தை, 18 வயது நிறைவடைந்து, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே, வட்டியுடன் முதிர்வு தொகை வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வுத்தொகைக்காக விண்ணப்பிக்காத பயனாளிகள், சேமிப்பு பத்திரத்துடன், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்று, மாற்றுச்சான்றிதழ், ஆதார் கார்டு, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல், 2 போட்டோ உடன் விண்ணப்பிக்கலாம். திருப்பூர் கலெக்டர் அலுவலக தரைதளத்தில், அறை எண்:35 ல் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.