/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
யுனிவர்சல் பள்ளியில் பெண் குழந்தைகள் தினம்
/
யுனிவர்சல் பள்ளியில் பெண் குழந்தைகள் தினம்
ADDED : அக் 11, 2025 11:17 PM

பல்லடம்: பல்லடம், சேடபாளையத்தில் உள்ள யுனிவர்சல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து, திருப்பூர் யங் இண்டியன்ஸ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியன, சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடின. இதையொட்டி, ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உறுதிமொழி மேற்கொண்டனர். மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பாதுகாப்பு அலுவலர் சதீஷ், குழந்தைகள் உதவி மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் கதிர்வேல், யங் இண்டியன்ஸ் தலைவர் மோகன், துணைத்தலைவர் விமல்ராஜ் உள்ளிட்டோர் பேசினர். பள்ளி தாளாளர் சாவித்திரி ராஜகோபால், செயலார் வினோதரணி, முதல்வர் விஸ்வநாதன், அறங்காவலர் சண்முகா பாரதி உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.