/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அபாகஸ் பள்ளியில் விளையாட்டு விழா
/
அபாகஸ் பள்ளியில் விளையாட்டு விழா
ADDED : அக் 11, 2025 11:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர், அபாகஸ் சர்வதேச மாண்டிசோரி பள்ளியில் 'அபாகஸ் ஒலிம்பியா' விளையாட்டு விழா நடந்தது. குட்வின் செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தாளாளர் வெங்கடாச்சலம், செயலாளர் சுரேஷ்பாபு, நிர்வாக இயக்குனர் அப்னா சுரேஷ், முதல்வர் ஆனந்தகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பள்ளியின் நால்வகை அணியினர் மிடுக்குடன் அணிவகுத்தனர்.
தடகளப்போட்டிகள் நடந்தன. யோகா, கராத்தே, துப்பாக்கிச்சுடுதல், ஸ்கேட்டிங், பிரமிடு, பரதநாட்டியம், பல்வகை நடனங்களில் மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப்பிடித்த அணிகள் சுழல் கோப்பையை வென்றன.