/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சமூக ஆர்வலர் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற ஆர்ப்பாட்டம்
/
சமூக ஆர்வலர் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற ஆர்ப்பாட்டம்
சமூக ஆர்வலர் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற ஆர்ப்பாட்டம்
சமூக ஆர்வலர் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 11, 2025 11:16 PM

பல்லடம்: சாமளாபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பழனிச்சாமி என்பவர், கடந்த செப்., 10ம் தேதி கார் மோதி உயிரிழந்தார். கார் ஓட்டி வந்த, சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிசாமி (தி.மு.க.,)மீது கொலை வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டார்.
மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு சார்பில், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றக்கோரியும், சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிசாமியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், சாமளாபுரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதம் தலைமை வகித்தார்.
தேசிய செயலாளர் ஹென்றி திபேன், மனித உரிமை செயற்பாட்டாளர் மோகன், விடுதலை சிறுத்தைகள் விவசாயிகள் பிரிவு மாநில துணை செயலாளர் வேலு சிவக்குமார், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ரத்தினா மனோகர், சமூக ஆர்வலர்கள் பிரபாகரன், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன், நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர்திருஞானசம்பந்தம், மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு பொறுப்பாளர் நிக்கோலஸ், சமூக ஆர்வலர் அண்ணாதுரை, பத்து ரூபாய் இயக்கப் பொதுச் செயலாளர் நல்வினை விஸ்வராஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.