/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு கல்லுாரி சேர்க்கை விரைவில் அறிவிப்பு
/
அரசு கல்லுாரி சேர்க்கை விரைவில் அறிவிப்பு
ADDED : மே 05, 2025 05:02 AM
திருப்பூர்; வழக்கமாக பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் நாளில், தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியர் உயர்கல்வியில் இணைய ஏதுவாக, அரசு கல்லுாரிகளில் இளங்கலை பட்டப் படிப்புக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். நடப்பாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு வரும் 9ம் தேதி காலை 10:00 மணிக்கு வெளியிடப்படுகிறது.
உயர்கல்வித்துறை, கல்லுாரி கல்வி இயக்ககம் தரப்பில் இருந்து, விண்ணப்பம் இணையதளத்தில் வெளியிடுவது, நேரடியாக வழங்குவது குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
அரசு கல்லுாரி முதல்வர்கள் கூறுகையில், ''வழக்கமாக, கல்லுாரி கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் (www.tngasa.in) வழிகாட்டுதல் வெளியிடப்படும். நடப்பு வாரத்தில் இதற்கான அறிவிப்பை எதிர்பார்த்துள்ளோம். மாநிலத்தில், 168க்கும் மேற்பட்ட அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில், 1.14 லட்சம் இடங்கள் உள்ளன.
கல்லுாரிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப கவுன்சிலிங் பல கட்டங்களாக நடத்த வேண்டியுள்ளது. விரைவில் அனைத்து அரசு கல்லுாரிகளுக்கும் பொதுவான அறிவிப்பு வெளியாகும்.
அரசு கல்லுாரியில் இணைய ஆர்வமுள்ள மாணவர்கள் இப்போதிருந்தே தயாராகிக் கொள்ளலாம்'' என்றனர்.