ADDED : மார் 29, 2025 06:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி : அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி ஆண்டு விழா, நுண்கலை மன்ற விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு, கல்லுாரி முதல்வர் நளதம் தலைமை வகித்தார். சர்வதேச வணிகவியல் துறை தலைவர் பாலமுருகன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக, தேனி மாவட்டம், வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உடற்கல்வித்துறை இயக்குனர் பிரசன்னகுமார் பங்கேற்று மாணவர்களின் எதிர்காலத்திற்கு தேவையான அறிவுரைகளை வழங்கினார்.
பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, பொருளியல் துறை தலைவர் மற்றும் விளையாட்டுத்துறை (பொறுப்பு) முகுந்தன் ஆண்டறிக்கை வாசித்தார். பல்வேறு கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. மாணவி தாமரைச்செல்வி நன்றி கூறினார்.