/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய அடைவு ஆய்வுத்தேர்வுக்கு தயாராகும் அரசு பள்ளிகள்
/
தேசிய அடைவு ஆய்வுத்தேர்வுக்கு தயாராகும் அரசு பள்ளிகள்
தேசிய அடைவு ஆய்வுத்தேர்வுக்கு தயாராகும் அரசு பள்ளிகள்
தேசிய அடைவு ஆய்வுத்தேர்வுக்கு தயாராகும் அரசு பள்ளிகள்
ADDED : நவ 29, 2024 12:20 AM
உடுமலை; அரசு பள்ளி மாணவர்களுக்கான, தேசிய அடைவு ஆய்வுத்தேர்வுக்கான மாதிரி தேர்வு, உடுமலை சுற்றுப்பகுதி பள்ளிகளில் நடக்கிறது.
மாணவர்களின் கற்றல் திறன்களான வாசிப்பு, எழுதுதல், அடிப்படை கணிதம் உள்ளிட்டவற்றை அளவீடு செய்வதற்கு, அடைவு ஆய்வுத்தேர்வுகள் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடத்தப்படுகிறது.
இந்த அளவீட்டின் வாயிலாக, கூடுதல் பயிற்சி தேவைப்படும் பிரிவுகளிலும் கவனம் செலுத்துவதற்கும், அதற்கான சிறப்பு செயல்பாடுகளும், பள்ளிகள் மேற்கொள்வதற்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு வட்டாரத்திலும், குறிப்பிட்ட சில பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, இந்த அளவீடு நடத்தப்படுகிறது.
உடுமலை, குடிமங்கலம் மடத்துக்குளம் வட்டாரத்தில், தேசிய அடைவு ஆய்வு தேர்வு டிச., மாத துவக்கத்தில் நடக்கிறது. ஒவ்வொரு வட்டாரத்திலும், துவக்கம் முதல் மேல்நிலை வரை குறிப்பிட்ட பள்ளிகள் தேர்வு செய்யப்படுகிறது.
அவற்றில், மூன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு இத்தேர்வு நடக்கிறது. மாணவர்களுக்கு இத்தேர்வு குறித்து விளக்கமளிப்பதற்கு, மாதிரி தேர்வு தற்போது அனைத்து அரசு பள்ளிகளிலும் நடக்கிறது.
அடிப்படையான வாசித்தல், எழுதுதல் மற்றும் கணிதம் குறித்து மாணவர்களின் திறன்களை பள்ளி அளவில் அறிந்து கொள்வதற்கு, மாதிரி தேர்வுகள் தற்போது நடக்கிறது.