/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜெய் சாரதா பள்ளியில் பட்டமளிப்பு விழா
/
ஜெய் சாரதா பள்ளியில் பட்டமளிப்பு விழா
ADDED : ஏப் 02, 2025 07:09 AM

திருப்பூர் : திருப்பூர், 15 வேலம்பாளையம், ஜெய் சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பட்டமளிப்பு விழா நடந்தது.
பள்ளி தாளாளர் நிக்கான்ஸ் வேலுசாமி தலைமை வகித்தார். பள்ளி அறக்கட்டளை செயலாளர் கீர்த்திகாவாணி சதீஷ், முன்னிலை வகித்தார். 'குழந்தை வளர்ப்பில், அவர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்; அவர்களுக்கு பொறுப்புகளை வழங்கி, ஆளுமைத்திறன் நிறைந்தவர்களாக உருவாக்க வேண்டும்' என்பது உள்ளிட்ட அறிவுரைகள், பள்ளி நிர்வாகத்தினரால் வழங்கப்பட்டது.
விபத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, பள்ளி நிர்வாகம் சார்பில், 'தி யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்' நிறுவனம் சார்பில், காப்பீடு தொகைக்கான காசோலையை, மாணவர்களின் பெற்றோரிடம் நிறுவன தலைமை ஆலோசகர் முத்துக்கண்ணப்பன் வழங்கினார்.

