/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேவதி துணை மருத்துவ அறிவியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
ரேவதி துணை மருத்துவ அறிவியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ரேவதி துணை மருத்துவ அறிவியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ரேவதி துணை மருத்துவ அறிவியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : மே 03, 2025 05:02 AM

திருப்பூர்; திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையான ரேவதி மெடிக்கல் சென்டர் ஆதரவில் செயல்படும், ரேவதி கல்வி நிறுவனங்களின் முக்கியமான கல்வி கட்டமைப்பான ரேவதி துணை மருத்துவ அறிவியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
கடந்த, 2017-2019ம் ஆண்டு, பி.எஸ்.ஸி., பாராமெடிக்கல் சயின்ஸ் பட்டம் பெற்ற மாணவர்கள் மற்றும், 2021 மற்றும் 2022ம் ஆண்டு, எம்.எச்.ஏ., பட்டதாரிகள் பங்கேற்றனர்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். ரேவதி கல்வி நிறுவனங்களின் நிறுவனர் டாக்டர் ஈஸ்வரமூர்த்தி முன்னிலை வகித்து பேசுகையில், ''சமூக சேவை அடிப்படையில், மாணவர்கள் செயல்பட வேண்டும். கல்வி சாதனைகளின் பெருமையை எடுத்து சொல்லும் விதமாகவும், மாணவர்களின் உழைப்பு, ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ரேவதி கல்வி நிறுவனங்களின் தத்துவம் ஆகியவற்றை இந்த விழா பிரதிபலிக்கிறது'' என்றார்.
விழாவின் தலைமை விருந்தினராக, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் டாக்டர். நாராயணசாமி பங்கேற்று, மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கி பேசினார்.
விழாவில், கல்லுாரி அறங்காவலர்கள் ரேவதி ஈஸ்வரமூர்த்தி, டாக்டர் விஷ்ணுராகவ், டாக்டர் ஹரி பிரணவ், அக்ஷரா குழும நிறுவனங்களின் தலைவர் ரமேஷ் கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
பட்டமளிப்பு உறுதி மொழியை கல்லுாரி முதல்வர் மெர்லின் ஏஞ்சல் வாசிக்க, மாணவர்கள் ஏற்றனர்.