/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்டம் முழுவதும் விரியும் பசுமை
/
மாவட்டம் முழுவதும் விரியும் பசுமை
ADDED : நவ 28, 2025 05:42 AM

திருப்பூர்: 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், டிச. மாத இறுதிக்குள் நடப்பாண்டின் இலக்கை எட்டும் வகையில், மரக்கன்றுகள் நடும் பணி வேகமெடுத்துள்ளது.
திருப்பூரில் 'வெற்றி' அமைப்பு சார்பில் 'வனத்துக்குள் திருப்பூர்' என்ற பெயரில், மரங்கள் நட்டு பராமரிக்கும் திட்டம் கடந்த 2015ம் ஆண்டில் துவங்கியது. இத்திட்டத்தில் கடந்தாண்டு வரை 23 லட்சம் மரங்கள் நடப்பட்டன. தற்போது 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 3 லட்சம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வகையில் தற்போது வரை 2.63 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. டிச., மாத இறுதிக்குள் மூன்று லட்சம் என்னும் இலக்கை நோக்கி திட்டம் வேகமாக செயல்பட்டு வருகிறது.
இதில், விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் பெரும் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் ஆதரவை அளித்து வருகின்றனர். நேற்று இத்திட்டத்தில், ஓலப்பாளையம் கிராமத்தில் பூபதி என்பவர் தோட்டத்தில் நேற்று 760 மரக்கன்றுகள் நடப்பட்டன.
அங்கு சந்தனமரம் 600 எண்ணிக்கை, செம்மரம் - 130, காயா - 20 மற்றும் இலுப்பை, கொடுக்காப்புளி ஆகியன தலா ஐந்து என்ற வகையில், 760 மரக்கன்றுகள் நடப்பட்டது.
இத்திட்டத்தில் இணைந்து மரம் வளர்க்க ஆர்வமும், இடவசதியும் கொண்டோர் 90470 86666 எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினர் தெரிவித்தனர். இதுதவிர, நடப்பாண்டு இறுதிக்குள் இத்திட்டத்தில், 26 லட்சம் மரக்கன்றுகள் என்ற இலக்கு எட்டப்படும் என்றும் தெரிவித்தனர்.

