/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போக்குவரத்து நெரிசல்; வாகன ஓட்டிகள் சிரமம்
/
போக்குவரத்து நெரிசல்; வாகன ஓட்டிகள் சிரமம்
ADDED : நவ 28, 2025 05:41 AM

திருப்பூர்: திருப்பூர் பல்லடம் ரோட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகர பகுதியில் விபத்தை குறைக்கவும், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கையை மாநகர போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக வாகனங்கள் சீராக செல்லும் வகையில், 'ப்ரீ சிக்னல்' முறையில் போக்குவரத்தை அமைத்து வருகின்றனர். நெரிசல் ஏற்படும் இடத்தில் போலீசாரை நியமித்து வருகின்றனர்.
இச்சூழலில், திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையத்தில் வாகனங்கள் தாறுமாறாக கடந்து வருவதால், வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்குவதோடு, பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்த பஸ் ஸ்டாப்பையொட்டி மாநகராட்சி பள்ளி செயல்பட்டு வருகிறது.
காலை, மாலை நேரங்களில் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க மாநகர போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

