/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காவலர் சிறுவர் - சிறுமியர் மன்றம் திறப்பு
/
காவலர் சிறுவர் - சிறுமியர் மன்றம் திறப்பு
ADDED : பிப் 20, 2025 11:57 PM

அனுப்பர்பாளையம்; திருப்பூர் காந்தி நகர் ரோட்டரி சங்கம் மற்றும் 15 வேலம்பாளையம் போலீசார் சார்பில், காவலர் சிறுவர் - சிறுமியர் மன்றம் திறப்பு விழா ஆத்துப்பாளையத்தில் நடைபெற்றது.
ரோட்டரி மாவட்ட கவர்னர் சுரேஷ்பாபு தலைமை வகித்தார். போலீஸ் துணை கமிஷனர் சுஜாதா திறந்து வைத்தார். ரோட்டரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தகுமார், மண்டல ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன், காந்தி நகர் ரோட்டரி சங்க தலைவர் உமாகாந்த், செயலாளர் மணிமாறன், பொருளாளர் ஆனந்த் குமார், திட்ட தலைவர் செந்தில் குமார், கவுன்சிலர் பிரேமலதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
போலீசார் கேட்டு கொண்டதன் பேரில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பங்களிப்பில் நான்கு லட்ச ரூபாய் மதிப்பில் மன்றம் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் பள்ளி செல்லா  சிறுவர், சிறுமிகளுக்கு படிப்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்து கூறுதல், குற்ற சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு அதனை தடுக்கும் பொருட்டு மன ரீதியான ஆலோசனை வழங்குதல் உள்ளிட்டவை இங்கு மேற்கொள்ளப்படும்.

