/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'குட்கா' விற்பனை கடைக்கு 'சீல்'
/
'குட்கா' விற்பனை கடைக்கு 'சீல்'
ADDED : செப் 16, 2025 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாநகராட்சி, இரண்டாவது மண்டல சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன், தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் நேற்று போயம்பாளையம், மும்மூர்த்தி நகர் பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர்.
அப்பகுதியிலுள்ள பேக்கரி மற்றும் பெட்டி உள்ளிட்ட 10 கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில், மும்மூர்த்தி நகரில் ஜெயசூர்யா என்பவர் வைத்துள்ள பெட்டி கடையில், குட்கா விற்பனை செய்வது தெரிய வந்தது. கடையில் இருந்து, 27 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடைக்கு 'சீல்' வைத்து, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.