/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரை நுாற்றாண்டு கால 'சரித்திரம்' எல்.ஆர்.ஜி., கல்லுாரி 'சங்கமம்'
/
அரை நுாற்றாண்டு கால 'சரித்திரம்' எல்.ஆர்.ஜி., கல்லுாரி 'சங்கமம்'
அரை நுாற்றாண்டு கால 'சரித்திரம்' எல்.ஆர்.ஜி., கல்லுாரி 'சங்கமம்'
அரை நுாற்றாண்டு கால 'சரித்திரம்' எல்.ஆர்.ஜி., கல்லுாரி 'சங்கமம்'
ADDED : டிச 23, 2024 05:05 AM

திருப்பூர் : திருப்பூர், பல்லடம் ரோட்டில் உள்ள எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரி, 1971ல் துவங்கப்பட்டது.
நேற்று, கல்லுாரியில், 1974 - 2023 ஆண்டு காலத்தில் படித்த முன்னாள் மாணவியருக்கான சந்திப்பு நிகழ்ச்சி ('சங்கமம் 2024') நடந்தது. முன்னாள் மாணவியர் சங்க தலைவர், முன்னாள் தமிழ்த்துறை பேராசிரியர் ஈஸ்வரி வரவேற்றார்.
இக்கல்லுாரியில் படித்து, தமிழாசிரியராக பணியாற்றி, தற்போது கல்லுாரி பொறுப்பு முதல்வராக உள்ள தமிழ்மலர் தலைமை வகித்தார். கல்லுாரி பேராசிரியர்கள் காந்திமதி, சுமதி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
வேதியியல் துறை உதவி பேராசிரியர் பாக்கியலட்சுமி நன்றி கூறினார். இக்கல்லுாரி முன்னாள் மாணவியும், கோவை அரசு கலைக்கல்லுாரி முன்னாள் முதல்வருமான பத்மாவதி மற்றும் முன்னாள் மாணவியர் இணைந்து கல்லுாரிக்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினர்.
முன்னாள் மாணவியர் பலரும் பேராசிரியர், கல்லுாரி முதல்வர்களாக, பல்கலை அளவில் உயர் பதவில் இருப்பவர்களாக இருந்தனர்.
நுழைவு வாயிலில் முன்னாள் மாணவியரை வரவேற்க சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு, போட்டோ ஷூட்டுக்கு தனியிடம் அமைக்கப்பட்டிருந்தது. வரிசையில் நின்று அங்கு மாணவியர் போட்டோ, 'செல்பி' எடுத்துக் கொண்டனர். மலரும் நினைவுகளை பரஸ்பரம் பகிர்ந்துகொண்டனர்.