/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரையாண்டு தேர்வு பள்ளிகளில் துவக்கம்
/
அரையாண்டு தேர்வு பள்ளிகளில் துவக்கம்
ADDED : டிச 09, 2024 10:55 PM

உடுமலை; உடுமலை கோட்டப்பள்ளிகளில், அரையாண்டு தேர்வுகள் துவங்கியது.வரும் 23ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகிறது.
நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு, 2025 மார்ச் மாதம் துவங்க உள்ளது. தற்போது பள்ளிகளில் பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார் படுத்தி வருகின்றனர்.
மேலும், சிறப்பு பயிற்சிகளை ஆசிரியர்கள் அளித்து வருகின்றனர். இந்நிலையில், பொதுத்தேர்வுக்கானமுன்னோட்டமாகவே அரையாண்டுத்தேர்வு நடத்தப்படுகிறது.
வழக்கமாக துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு டிச., இறுதியில் அரையாண்டுதேர்வு நடத்தப்பட்டு விடுமுறை விடப்படும்.
உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு மட்டுமே முன்னதாக துவக்கப்பட்டு, தேர்வுகளுக்கு இடையில் விடுமுறை விடப்பட்டு, டிச., இறுதியில் நிறைவு செய்யப்படும்.
இம்முறை அனைத்து பள்ளிகளுக்கும், ஒரே நாளில் அரையாண்டு தேர்வு துவக்கப்பட்டு, நிறைவு செய்யப்படுகிறது.
உடுமலை வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் துவக்கம், நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், அரையாண்டு தேர்வுகள் நேற்று துவங்கியது. தேர்வுகள் டிச., 23ம் தேதியுடன் நிறைவடைகிறது.
துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகளுக்கான இடைவெளி நாட்களில் வகுப்புகள் நடக்கிறது. உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், மாணவர்களுக்கு சுழற்சி முறையில் தேர்வுகள் நடக்கிறது.
மாணவ, மாணவியரும் அரையாண்டு தேர்வுகளை சிறந்த முறையில் எழுதுவதற்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர். இதற்கு பெற்றோரும் ஊக்கமளித்து வருகின்றனர்.