/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'வாழ்க்கையில் விட்டுக்கொடுத்தால் சந்தோஷம்'
/
'வாழ்க்கையில் விட்டுக்கொடுத்தால் சந்தோஷம்'
ADDED : ஜன 02, 2025 06:07 AM
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் சென்னை ஜெயமூர்த்தியின் மகாபாரதம் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று அவர் பேசியதாவது:
பஞ்ச பூதங்களுக்குள் தான் பூமியின் இயக்கம் உள்ளது. நமக்கு ஒருவரை, ஒன்றை பிடிக்க வில்லையென்றால், அவர்களை, அதனை விட்டு விலகிட வேண்டும். ஒருவர் மனதை நோகச் செய்து ஒரு பொருளை அவரிடம் இருந்து நாம் அடைந்தால் அந்தப் பொருளால் பின்னாளில் வெகுவாக நாம் வேதனை பட வேண்டும்.
எல்லோர் வாழ்க்கையிலும் ஏற்றம் தாழ்வு என இரு பகுதிகள் கடக்கும். அடியார்களின் துாய பக்திக்கு இறைவன் எப்போதும் அடிபணிவான். நம்மிடம் இருப்பதை வைத்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும். தேவையில்லாத ஆடம்பரத்தை பெருக்கிக் கொண்டால் வேதனையே மிஞ் சும். கணவன், மனைவி இருவருக்குள்ளும் யார் பெரியவர் என்ற அகங்காரம் இருக்கக் கூடாது. திருமண உறவில் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்லும் இல்லறத்தில் என்றும் சந்தோஷம் நிலைத்திருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.

