/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உலர் தீவனத்துக்கு வைக்கோல் பிற மாவட்ட வரத்து துவக்கம்
/
உலர் தீவனத்துக்கு வைக்கோல் பிற மாவட்ட வரத்து துவக்கம்
உலர் தீவனத்துக்கு வைக்கோல் பிற மாவட்ட வரத்து துவக்கம்
உலர் தீவனத்துக்கு வைக்கோல் பிற மாவட்ட வரத்து துவக்கம்
ADDED : ஜன 29, 2025 08:35 PM

உடுமலை; உலர் தீவன தேவைக்காக, தேவகோட்டை பகுதியிலிருந்து வைக்கோல் கொண்டு வரப்பட்டு, உடுமலையில் விற்பனை செய்யப்படுகிறது.
உடுமலை சுற்றுப்பகுதிகளில், பால் உற்பத்திக்காக மாடுகள் அதிகளவு வளர்க்கப்படுகிறது. மாடுகளுக்கு, உலர் மற்றும் பசுந்தீவனத்தை சரிவிகிதமாக வழங்குகின்றனர். வழக்கமாக இந்த சீசனில், உலர் தீவனத்துக்கு, மக்காச்சோள தட்டு வாங்கி இருப்பு செய்வார்கள்.
இந்தாண்டு, மக்காச்சோள அறுவடையின் போது பெய்த மழையால், பயிர் மற்றும் தட்டு தரமில்லாமல் உள்ளது. இயந்திரங்களை கொண்டு நேரடியாக அறுவடை செய்வதால், பயிரை முழுவதுமாக தீவனமாக பயன்படுத்த முடிவதில்லை, என, கால்நடை வளர்ப்போர் தெரிவிக்கின்றனர்.
எனவே, உலர் தீவன தேவைக்காக வைக்கோலை மட்டுமே நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, தேவகோட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து, வைக்கோல் கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. ஒரு வைக்கோல் கட்டு, 250 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பிற மாவட்டங்களில் இருந்து வரத்து அதிகரிப்பால், விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

