/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இதயங்களை ஒன்றிணைக்கும் 'ஹார்ட்புல்னெஸ்' ஊர்கள் தோறும் உருவாகும் தியான மையங்கள்
/
இதயங்களை ஒன்றிணைக்கும் 'ஹார்ட்புல்னெஸ்' ஊர்கள் தோறும் உருவாகும் தியான மையங்கள்
இதயங்களை ஒன்றிணைக்கும் 'ஹார்ட்புல்னெஸ்' ஊர்கள் தோறும் உருவாகும் தியான மையங்கள்
இதயங்களை ஒன்றிணைக்கும் 'ஹார்ட்புல்னெஸ்' ஊர்கள் தோறும் உருவாகும் தியான மையங்கள்
ADDED : ஏப் 26, 2025 11:39 PM
'ஹார்ட்புல்னெஸ்' அமைப்பு, 1945-ம் ஆண்டு, உத்திரபிரதேச மாநிலத்தில் ஷாஜகான்பூரில் துவங்கப்பட்டது. கடந்த 80 ஆண்டுகளாக இயங்கி வரும் ஆன்மீக அமைப்பான, ஸ்ரீ ராம் சந்த்ர மிஷன் அமைப்பின் ஓர் அங்கம்.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அருகே, 'கன்ஹா சாந்தி வனம்' இதன் உலகத் தலைமையிடமாகக் கொண்டுள்ளது. தற்போது உலக அளவில்,165 நாடுகளில் இந்த அமைப்பு கிளைகளுடன் இயங்கி வருகிறது.
எளிமையான தியானப் பயிற்சி முறையை கற்பித்து வருகிறது ஹார்ட்புல்னெஸ் அமைப்பு. பதினைந்து வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் எந்தவித கட்டணமும் இல்லாமல் இந்த சேவையை வழங்கி, வருகிறது. உலகம் முழுவதும், பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த பயிற்சி முறையைப் பின்பற்றி வருகின்றனர்.
எளிய பயிற்சி முறையை சிரத்தையுடன் மேற்கொண்டு வருபவர்கள், தங்களுக்குள் வியக்கத்தக்க, 'தன்மை மாற்றங்கள்' ஏற்பட்டு வருவதை அனுபவப்பூர்வமாக உணர்ந்து வருகின்றனர்.
இதில் ஈடுபட்ட பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தங்கள் படிப்பில் முழுக் கவனம் செலுத்தி படிக்க முடிவதாகவும், நினைவாற்றல் மேம்பட்டு, தேர்வுகளை அச்சமின்றி எதிர்கொள்ள முடிகிறது என்று கூறுகின்றனர்.
'மன அழுத்தம்' என்ற பிரச்னையிலிருந்து விடுபட 'தியானப் பயிற்சி' பெரும் உதவியாக அமைந்துள்ளது, என மனோதத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த அமைப்பு, வரும் 2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் வசிக்கும், பதினைந்து வயதுக்கும் மேற்பட்ட அனைவரையும் இந்தப் பயிற்சி முறை சென்றடைய வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு, ஒரு செயல்திட்டத்தை உருவாக்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தின், 9 தாலுகாவிலுள்ள, 350 வருவாய் கிராமங்களிலும், குறைந்தபட்சம் தலா ஒரு தியான மையமும், வாய்ப்புள்ள இடங்களில் கூடுதல் மையங்களும் அமைப்பதற்காக செயல்திட்டம் வகுக்கப்பட்டு, செயல்பாடுகள் துவங்கியுள்ளது.
இந்த மையங்களில், தியானம், யோகாசனம், மூச்சுப் பயிற்சி மற்றும் முத்திரை பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக மையம் துவங்க ஆர்வம் உள்ளவர்களும், அமைப்பில் இணைய விருப்பம் உள்ளவர்களும், 99409 46428 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஹார்ட்புல்னெஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

