/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பரங்குன்றம் தீர்ப்பு தர்மத்துக்கு கிடைத்த வெற்றி :ஹிந்து முன்னணி வரவேற்பு
/
திருப்பரங்குன்றம் தீர்ப்பு தர்மத்துக்கு கிடைத்த வெற்றி :ஹிந்து முன்னணி வரவேற்பு
திருப்பரங்குன்றம் தீர்ப்பு தர்மத்துக்கு கிடைத்த வெற்றி :ஹிந்து முன்னணி வரவேற்பு
திருப்பரங்குன்றம் தீர்ப்பு தர்மத்துக்கு கிடைத்த வெற்றி :ஹிந்து முன்னணி வரவேற்பு
ADDED : அக் 12, 2025 12:38 AM
திருப்பூர்:'திருப்பரங்குன்றம் தொடர்பான தீர்ப்பு தர்மத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி'' என்று, ஹிந்து முன்னணி வரவேற்றுள்ளது.
இதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
திருப்பரங்குன்றம் புனித மலையை காக்க ஜூன் 22ம் தேதி மதுரையில், 5 லட்சம் முருக பக்தர்கள் பங்கேற்ற மாநாட்டை நடத்தினோம். பக்தர்களின் பக்தியின் சக்தி ஒருபுறம்; மறுபுறம் திருப்பரங்குன்றம் மலையின் உரிமை மற்றும் புனிதம் காக்க கோர்ட்டில் சட்ட போராட்டம் நடந்தது.
வழக்கை நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இரண்டு நீதிபதிகளில், ஒருவர் தீர்க்கமான கருத்தை கூறிய போதிலும், மற்றொருவர் கருத்து தெளிவில்லாத நிலையில், மூன்றாவது நீதிபதியின் கருத்துக்கு வழக்கின் தீர்ப்பு சென்றது.
நீதிபதி விஜயகுமார் நேற்று முன்தினம் கூறிய தீர்ப்பில், 'இம்மலை திருப்பரங்குன்றம் முருகனின் மலை தான். அம்மலையில் உயிர் பலியிடவோ, மாமிச உணவு சாப்பிடவோஅனுமதி கிடையாது' என்று தெளிவான தீர்ப்பை தந்துள்ளார். இது தர்மத்துக்கும், ஜனநாயக வழியில் போராடிய முருக பக்தர்களுக்கும் கிடைத்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி.
ஆளும் கட்சியான தி.மு.க.,வின் ஆதரவாலும், துாண்டுதலாலும் சில இஸ்லாமிய அமைப்புகள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, மதக்கலவரத்தை துாண்ட முயற்சித்தனர். முருகனின் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்துக்கு நேர்ந்த அவமதிப்பால் முருக பக்தர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
இந்த தீர்ப்பு முருகனின் அருளால் தர்மத்துக்கு கிடைத்த வெற்றி என்றே ஹிந்து முன்னணி கருதுகிறது. இந்த தீர்ப்பை மதித்து தமிழக காவல்துறையும், அரசு அதிகாரிகளும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் திருப்பரங்குன்றம் மலை உச்சி, தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். கோவிலின் வாயிலில் உள்ள மோட்ச தீபத் துாணில் ஏற்றிட கூடாது என, பல ஆண்டுகளாக ஹிந்து முன்னணி போராடி வருகிறது.
ஹிந்து முன்னணியின் மாநில தலைவராக இருந்த மறைந்த வக்கீல் ராஜகோபாலன் தொடர்ந்து போராடினார். கோர்ட் மூலம் தீபத்துாணில் ஏற்றுவதற்கு தீர்ப்பு கிடைத்தது. ஆனாலும், தமிழக அரசும், அறநிலையத்துறையும், காவல்துறையும் கோர்ட் தீர்ப்பை அவமதித்து வருகிறது. இதை வலியுறுத்தி, ஒவ்வொரு ஆண்டும் மாபெரும் போராட்டத்தை ஹிந்து முன் னணி நடத்தி வருகிறது.
எனவே, 'குன்றம் முருகனுக்கே' என்ற தீர்ப்பை கொண்டாடும் வகையில் இந்த ஆண்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள பாரம்பரியமான தீபத்துாணில் மகா தீபம் ஏற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும்.
அனைத்து முருக பக்தர்களும், முருக பெருமானின் உரிமையை நிலைநாட்டிட கார்த்திகை தீபத்திருநாளில் திருப்பரங்குன்றம் யாத்திரையாக வந்திடுவோம். முருகனின் அருளால் கிடைத்த கோர்ட் தீர்ப்பை ஹிந்து முன்னணி மனதார வரவேற்கிறது.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.