/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போலீசுக்கு அடி, உதை: 'புள்ளிங்கோ' அட்ராசிட்டி
/
போலீசுக்கு அடி, உதை: 'புள்ளிங்கோ' அட்ராசிட்டி
ADDED : ஜூலை 09, 2025 06:17 AM
திருப்பூர்:
பிறந்த நாள் கொண்டாட கேக் வாங்க வந்த இடத்தில், ரோட்டில் 'அட்ராசிட்டி' செய்த வாலிபர்களை, தட்டிக்கேட்ட போலீஸ்காரர் தாக்கப்பட்டார்.
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பவானி நகர் முதல் வீதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 21. இவர், தன் பிறந்த நாளை கொண்டாட நேற்று முன்தினம் இரவு 10:15 மணிக்கு, நண்பர்கள் ஒன்பது பேருடன் மதுபோதையில், கோல்டன் நகரில் உள்ள பேக்கரிக்கு சென்றார்.
நடுரோட்டில் நின்று 'புள்ளிங்கோ' கும்பல், போதை தலைக்கேறி ஆபாச வார்த்தைகளில் சத்தம் போட்டு, 'அட்ராசிட்டி' செய்தனர். பேக்கரிக்கு அருகே ஒரு வீட்டில் வசித்த கொங்கு நகர் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த முதல் நிலை போலீஸ்காரர் தங்கப்பாண்டி, 32, அந்த கும்பலை, போனில் வீடியோ எடுக்க முயன்றார். கும்பல், தங்கப்பாண்டியை தாக்கி, அவர் வீட்டின் மீது கற்களை வீசினர்.
திருப்பூர் வடக்கு போலீசார், பாலகிருஷ்ணன், 21, உட்பட 8 பேரை கைது செய்தனர். தொடர்புடைய மேலும் இருவரை தேடி வருகின்றனர்.