/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழிலாளர் தீபாவளி போனஸ்; எச்.எம்.எஸ்., சங்கம் வலியுறுத்தல்
/
தொழிலாளர் தீபாவளி போனஸ்; எச்.எம்.எஸ்., சங்கம் வலியுறுத்தல்
தொழிலாளர் தீபாவளி போனஸ்; எச்.எம்.எஸ்., சங்கம் வலியுறுத்தல்
தொழிலாளர் தீபாவளி போனஸ்; எச்.எம்.எஸ்., சங்கம் வலியுறுத்தல்
ADDED : செப் 30, 2025 11:52 PM
திருப்பூர்; பனியன் தொழிலாளருக்கு, விரைவில் தீபாவளி போனஸ் வழங்க வேண்டுமென, எச்.எம்.எஸ்., சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்ட எச்.எம்.எஸ். தொழிற்சங்க நிர்வாகிகள் குழு கூட்டம், ஊத்துக்குளி ரோட்டிலுள்ள மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. சங்க தலைவர் அப்புக்குட்டி தலைமை வகித்தார். செயலாளர் முத்துசாமி முன்னிலை வகித்தார்.
செயலாளர் கோவிந்தசாமி, கிருஷ்ணதாஸ், கருப்புசாமி, சரோஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். தீபாவளி பண்டிகை நெருங்குவதால், பனியன் தொழிலாளருக்கு, கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதல் போனஸ் வழங்க வேண்டும். பண்டிகைக்கு, 20 நாட்கள் முன்னதாக வழங்க வேண்டும். நுாற்பாலை, விசைத்தறி, இன்ஜினியரிங் பிரிவு தொழிலாளர்களுக்கு, விரைவாக போனஸ் வழங்க வேண்டும்.
தொழிலாளருக்கு போனஸ் வழங்குவதுடன், ஓய்வு லீவு, பண்டிகை லீவு சம்பளமும் வழங்க வேண்டும் என்று உற்பத்தியாளர் சங்கங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.