UPDATED : அக் 27, 2026 07:41 PM
ADDED : அக் 27, 2026 07:36 PM

அவிநாசி: ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி, அவிநாசி புனித தோமையர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
‘நேர்மையே வளமை’ என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். எஸ்.ஐ., நாகேந்திரன் உள்ளிட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பங்கேற்றனர்.
அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுப்பதையும் பெறுவதையும் தடுப்பது, லஞ்சம் கொடுக்காமல் அரசு சேவைகளைப் பெறுவதற்குப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், ஊழலை ஒழிப்பதில் மாணவர்களின் பங்கு ஆகியவை குறித்து டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் விளக்கிப் பேசினார்.
பள்ளித் தலைமை ஆசிரியர், மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவியர்.
